வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கல்... கட்டுக்கட்டாக சிக்கிய 4.80 கோடி ரூபாய்!

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கல்... கட்டுக்கட்டாக சிக்கிய 4.80 கோடி ரூபாய்!
Updated on
2 min read

நாமக்கல் அருகே மோகனூரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4.80 கோடி ரூபாய் பணம் வருமானவரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் தனியார் பேருந்து உரிமையாளர் சந்திரசேகர் என்பவர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சந்திரசேகரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மதியம் சென்று அதிரடி  சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில்  அங்கு கணக்கில் வராத ஏராளமான பணம் கட்டுக் கட்டாக இருந்தது பெரிய வந்தது. அதையடுத்து பணம் எண்ணும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த பணம் எண்ணப்பட்டது. நள்ளிரவு வரை சுமார் ஒன்பது மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 4.80 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சந்திரசேகர் பிரபல அரசியல் கட்சிக்கு நெருக்கமானவர் என கூறப்படும் நிலையில் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா என அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதே போல சென்னையில் நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2.5 கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் அந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அது தனியார் கல்லூரியின் பணம் என்று தெரிய வந்துள்ள நிலையில் அதுவும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம் தான் என்று விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த கல்லூரியின் மீதும் வருமான வரித்துறையினர் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in