பகீர்... தேர்தல் செலவுக்கு ரூ.200 கோடி ஹவாலா பணம்... விமான நிலையத்தில் சுற்றிவளைத்த வருமானவரித்துறை!

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய துபாயிலிருந்து தமிழ்நாட்டுக்கு ரூ.200 கோடியை கடத்தி வர திட்டமிட்டவரை வருமானவரித்துறையினர் கைது செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருமானவரித் துறையினரும், அமலாக்க துறையினரும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் ஹவாலா பணப் பரிமாற்றம் நடைபெற இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த 7 ம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த வினோத் குமார் ஜோசப் என்பவரை வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வினோத்குமார் துபாய் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்த சட்ட விரோதமாக பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் தரகராக செயல்பட்டு வருவது தெரியவந்தது. அவரிடமிருந்து செல்போன், ஐ-பேட், லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள் வினோத்குமாரின் வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது துபாயிலிருந்து சென்னைக்கு ஹவாலா முறையில் பணத்தை கொண்டு வரும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. துபாயைச் சேர்ந்த செல்வம் என்பவர் மூலம் 200 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை துபாயிலிருந்து மக்களவைத் தேர்தலுக்காக தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இவர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அப்பு என்கிற விநாயகர் வேலன் என்பவர் வினோத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து ஹவாலா மூலம் கொண்டுவரப்படும் பணத்தை பிரதான அரசியல் கட்சிக்கு கொடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் வருமானவரித் துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரத்தில் துபாயைச் சேர்ந்த பெண் மற்றும் மலேசியாவை சேர்ந்த நபர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஹவாலா பரிமாற்றம் தொடர்பான வழக்கு என்பதால் வினோத் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து எந்த கட்சிக்கு 200 கோடி ரூபாய் கொண்டு வர திட்டமிடப்பட்டது என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...   


லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in