தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை... 34 தொகுதிகளில் அடிவாங்கிய வாக்குப்பதிவு; அதிர்ச்சி தகவல்!

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்

நேற்று நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 69.46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 30.54 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. அதாவது தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், நேற்று 4 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் தான் வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 1 கோடியே 90 லட்சத்து 36 ஆயிரத்து 781 பேர் வாக்களிக்கவில்லை. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில், 2024 தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 3% சரிந்துள்ளது. கடந்த தேர்தலை விட 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு சரிந்துள்ளது.

மின்னணு வாக்கு எந்திரம் / தேர்தல்
மின்னணு வாக்கு எந்திரம் / தேர்தல்

தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால் கடந்த 2019 தேர்தலில் தருமபுரி தொகுதியில் 82.33% வாக்குகள் பதிவாகியிருந்தது, எனவே இதுவும் குறைவுதான். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, வேலூர் ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே கடந்த 2019 தேர்தலை விட சற்று அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது. மற்ற 35 தொகுதிகளில் கடந்த முறையை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

வட சென்னை தொகுதியில் 2019இல் 64.26% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 60.13% வாக்குகள் பதிவாகியுள்ளது அதேபோல தென் சென்னையில் 2019இல் 57.07% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 54.27% வாக்குகள் பதிவானது. மத்திய சென்னையில் கடந்த முறை 58.98% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. ம

வடசென்னை தொகுதியில் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அதில் 8 லட்சத்து 99 ஆயிரத்து 679 பேர் வாக்களித்துள்ளனர். 5 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் வாக்களிக்க வரவில்லை. தென்சென்னை தொகுதியில் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் 10 லட்சத்து 97 ஆயிரத்து 954 பேர் வாக்களித்துள்ளனர். 9 லட்சத்து 25 ஆயிரத்து 179 பேர் வாக்களிக்கவில்லை. இதே போல மத்திய சென்னை தொகுதியில் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7 லட்சத்து 27 ஆயிரத்து 871 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 6 லட்சத்து 22 ஆயிரத்து 290 பேர் வாக்களிக்கவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in