கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு... வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை!

கர்நாடகாவில் தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு - போலீஸார் குவிப்பு
கர்நாடகாவில் தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு - போலீஸார் குவிப்பு

கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்டத்திலும் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி மூன்றாம் கட்டத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
நாளை 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 6:00 மணியுடன் 14 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதியின்றி ஒன்றுகூடவும், போராட்டங்கள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசியல் கட்சியினர் ஒன்று கூடி முழக்கங்களை எழுப்பவும், தனிநபர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கவும், உருவ பொம்மைகள் எரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பொருட்களை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரம்
தேர்தல் பொருட்களை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள மதுபான கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மதுபானம் விற்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையமும், போலீஸாரும் எச்சரித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாகவே பெங்களூரு நகரத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதம் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. இந்த முறை கடுமையான வெயில் நிலவி வருவதால் இந்த வாக்குப் பதிவு சதவீதம் மேலும் குறையலாம் என்கிற அச்சம் இருக்கிறது. அதேசமயம் தேர்தல் ஆணையம் இம்முறை அதிகப்படியான வாக்காளர்களை வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நாளை நடைபெறும் முதல்கட்ட வாக்குப் பதிவில் பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளில் மட்டும் 97 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in