மாம்பழக் கூடைகளுக்கு நடுவில் காரில் பிடிபட்ட 1,34,99,000 ரூபாய் யாருடையது?... தொடரும் மர்மம்!

பணம் பறிமுதல் செய்யப்பட்ட கார்.
பணம் பறிமுதல் செய்யப்பட்ட கார்.

பெங்களூருவில் மாம்பழக் கூடைகளுக்கு நடுவே பிடிபட்ட 1,34,99,000 ரூபாய் யார் என்று கண்டறிவதில் மர்மம் தொடர்கிறது. இதுதொடர்பாக இரண்டு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் வாகனச்சோதனையில் ஈடுபட்டுள்ளது.இந்த நிலையில், பெங்களூரு தேர்தல் அதிகாரிகளுக்கு ஏப்ரல் 13-ம் தேதி காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் ஜெயநகரில் ஒரு சொகுசு காரில் கோடிக்கணக்கான ரூபாய் கடத்தப்படுவதாகவும், டூவீலரில் இருந்து பணம் கைமாற்றப்படுவதாகவும் கூறி விட்டு அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல்

இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அவ்வழியாக வந்த கார்களை நிறுத்தி சோதனையிட துவங்கினர். அப்போது ஜெயநகர் 4வது பிளாக்கில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில், மாம்பழங்கள் கொண்டு செல்லப்படுவதாக அந்த வாகனத்தில் இருந்தவர்கள் கூறினர். அத்துடன் வாகனத்தை சோதனையிட விடாமல் தடுத்தனர்.

இதனால் சந்தேகமடைந்த தேர்தல் பறக்கும் படையினர், அந்த காரில் மாம்பழங்களுக்கு மத்தியில் இருந்த பையை சோதனையிட்டனர். அதில், பல கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி என்.மஞ்சுநாத் அளித்த புகாரின் பேரில், டூவீலர் மற்றும் கார் உரிமையாளர்களான சோமசேகர், தனஞ்சய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் அவர்கள் இருவருக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. இந்த பணத்தை நகர தேர்தல் அதிகாரி மணீஷ் மவுட்கில் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தார். காரில் சிக்கிய பணத்தை எண்ணியபோது ரூ.1,34,99,000 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில ஆவணங்களும் கிடைத்தன. இவை அனைத்தும் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் ஒரு கான்ட்ராக்டருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக கடத்தப்பட்ட கோடிக்கணக்கான பணம் எந்த கட்சிக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அத்துடன் டூவீலர் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் படை சோதனை
பறக்கும் படை சோதனை

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வாகனச்சோதனையின் போது ​​நீல நிற ஆக்ஸஸ் காரில் ஒருவர் பையை வைத்திருந்தார். நோடல் அதிகாரி நிகிதா அவரிடம் சென்று விசாரித்தார். பையில் என்ன இருக்கிறது என்பதைக் காட்டுங்கள் என்று கேட்ட போது, மாம்பழ மூட்டை என்று கூறினர். அந்த காரை அதிகாரி நிகிதா சோதனை செய்ய சென்ற போது அதில் இருந்த 5 பேர் தப்பியோடி விட்டனர்.

முதலில், பையில் என்ன இருக்கிறது என்பதைக் காட்டுங்கள் என்று அவரிடம் கேட்டபோது, ​​​​அது மாம்பழ மூட்டை என்று கூறினார். நோடல் அதிகாரி நிகிதா காரை சோதனை செய்ய சென்றபோது, ​​காரில் இருந்த 5 பேர் ஓடி விட்டனர். அந்த காரில் மொத்தம் 1,34,99,000 ரூபாய் கிடைத்தது. அதே சாலையில் பதிவு எண் இல்லாத சிவப்பு நிற வோக்ஸ்வேகன் காரும், வெள்ளை நிற பென்ஸ் காரும் நின்று கொண்டிருந்தன. அதில் வோக்ஸ்வேகன் காரில் பிபிஎம்பி ஆவணங்கள் மற்றும் பதிவு எண் இல்லாத மொபைல் போன் மற்றும் கார்டு பை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

 சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in