சிறையில் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தல்; 2 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சவுக்கு சங்கர்!

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்
Updated on
2 min read

"சிறையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை துன்புறுத்துவதை கண்டித்து 2 நாட்கள் சவுக்கு சங்கர் சிறைக்குள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்" என்று சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியுபர் சவுக்குசங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் -19 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவானது, இன்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் தீர்ப்புக்காக வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "சிறையில் தனக்கான கொடுமைகளை கண்டித்து புழல் சிறையில் சவுக்கு சங்கர் 2 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். இதனையடுத்து இந்த உண்ணாவிரதத்தை சிறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி முடிக்க வைத்துள்ளனர். கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கரை சிறை விதிகளை மீறி 24 மணி நேரமும் தனிமைச் சிறையில் அடைத்து, காவலரை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

வக்கீல் கோபால கிருஷ்ணன்
வக்கீல் கோபால கிருஷ்ணன்

சவுக்கு சங்கரின் கையில் இருந்த காயத்திற்கான சிகிச்சை குறித்து புழல்சிறை நிர்வாகத்திடம் கேட்டால் மருத்துவ சான்று இல்லை எனக் கூறி மருத்துவம் அளிக்கவில்லை என்கிறார்கள். சவுக்கு சங்கரின் மீதான வழக்கை சட்டரீதியாக நீதிமன்றத்தில் நடத்திவருகிறோம். ஆனால் சிறையில் தொடர்ந்து கொடுமைகள் நடைபெறுகிறது. சிறையில் சவுக்கு சங்கருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in