இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

தேர்தல் பறக்கும் படை சோதனை (பைல் படம்)
தேர்தல் பறக்கும் படை சோதனை (பைல் படம்)
Updated on
2 min read

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி

இதனையொட்டி தொகுதி முழுவதும் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் விரைவில் வேட்பாளரை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தொடர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலக்கொந்தை பாலம் அருகே பறக்கும் படை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வெள்ளிக் கொலுசுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கவியரசனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உரிய ஆவணங்களின்றி சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 23.234 கிலோ வெள்ளிக் கொலுசுகள் எடுத்துவரப்பட்டது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கொலுசுகள்
பறிமுதல் செய்யப்பட்ட கொலுசுகள்

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை விக்கிரவாண்டி வருவாய் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in