காதலியை கரம் பிடித்த யூடியூபர் அபிஷேக் ராஜா... குவியும் வாழ்த்து!

அபிஷேக் ராஜா
அபிஷேக் ராஜா

யூடியூபர் அபிஷேக் ராஜா தனது காதலியை கரம் பிடித்துள்ளார். இவரது திருமணப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

பட விமர்சகராக யூடியூபில் பெயர் பெற்றவர் அபிஷேக் ராஜா. விமர்சகராக மட்டுமல்லாது தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். ரொமாண்டிக் ஜானரில் ‘ஜாம் ஜாம்’ என்ற படத்தை அவர் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த நல்ல செய்தியோடு கூடவே தனது காதலி ஸ்வாதி நடராஜனையும் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று அறிமுகப்படுத்தி இருந்தார். "என்னை உனக்கு சரியான பார்ட்னராக தேர்ந்தெடுத்து மாற்றியதற்கும், என்னை விட்டு விடாமல் சகித்துக் கொண்டு கூடவே இருப்பதற்கும் நன்றி” எனக் கூறியிருந்தார்.

இன்று இந்த ஜோடிக்குத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அபிஷேக் ராஜாவுக்கு கடந்த 2017ல் தீபா என்பவருடன் திருமணம் ஆகி இருந்தது. ஆனால், திருமணம் ஆன இரண்டே வருடங்களில் இந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in