5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

சிகிச்சை முடிந்து வனப்பகுதிக்குள் சென்ற பெண் யானை
சிகிச்சை முடிந்து வனப்பகுதிக்குள் சென்ற பெண் யானை

5 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் யானை இன்று மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் கடந்த 30ம் தேதி பெண் யானை ஒன்று உடல் நலக் குறைபாடால் நடக்க முடியாமல் படுத்து இருந்தது. சுமார் 40 வயதான அந்த யானையின் அருகிலேயே 4 மாத ஆண் யானை குட்டி ஒன்று சுற்றித் திரிந்தது. இதையடுத்து அந்த யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். யானைக்கு சத்தான உணவுகள் மூலமாக மருந்துகள் அளிக்கப்பட்டு வந்தது. யானை தானாக எழுந்து நிற்க சிரமப்பட்டதால் கிரேன் உதவியுடன் யானை தூக்கி நிறுத்தப்பட்டு சிகிச்சைகள் தொடர்ந்து வந்தது.

பெண் யானை
பெண் யானை

யானையின் உடல்நிலை நேற்று ஓரளவுக்கு சீரான நிலையில் இன்று யானை வனத்திற்குள் அனுப்பப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை யானை கிரேனில் இருந்த கயிறுகளில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக யானைக் குட்டி மற்றொரு கூட்டத்துடன் சுற்றி வரும் நிலையில், அதனை கண்காணிக்கும் பணியிலும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் யானை
பெண் யானை

வனத்திற்குள் அனுப்பப்பட்டுள்ள இந்த யானை, குட்டியுடன் சேரும் வரை தொடர்ந்து கண்காணிக்க இருப்பதாகவும், அதன் பின்னரும் அதன் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். யானை உடல்நலம் தேறி வனப்பகுதிக்குள் சென்றுள்ளதை அடுத்து வனத்துறை கால்நடை மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in