தொலைந்து போன மனிதாபிமானம்... புற்றுநோயால் இறந்தவரின் உடலை வீட்டிற்குள் அனுமதிக்காத மனைவி!

புற்றுநோயால் உயிரிழந்த குருவின் உடல் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் உயிரிழந்த குருவின் உடல் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

புற்று நோயால் உயிரிழந்த கணவனின் சடலத்தை வீட்டிற்குள் கொண்டு செல்ல மனைவி அனுமதிக்காததால், வீட்டு வாசலில் உள்ள மின்கம்பத்தில் உடலை அப்பகுதி மக்கள் கட்டி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டம் பனஹட்டி நகரில் உள்ள சோம்வார்பேட்டையைச் சேர்ந்தவர் குரு கிட்டூர்(51). புற்று நோயால் பாதிக்கப்பட்ட குரு, கடந்த இரண்டு மாதங்களாக மனைவியின் வீட்டில் தங்கியிருந்தார், அவர் சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில், பனஹட்டி நகர் திரையரங்கு அருகே சாலையோரத்தில் நேற்று மாலை குரு இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், குருவின் சடலத்தை அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர். ஆனால், புற்று நோயால் இறந்து போன தனது கணவனின் உடலை வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது என்று குருவின் மனைவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அப்பகுதி மக்கள் எவ்வளவோ, எடுத்துச் சொல்லியும் குருவின் மனைவியும், அவரது குடும்பத்தினரும் அதை ஏற்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குருவின் உடலை வீட்டு வாசலில் இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். இதனைக் கவனித்த நகர சமஸ்தா தெய்வ மண்டலியைச் சேர்ந்தவர்கள், குரு மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்பின் குருவின் உடலை அவர்கள் வீட்டிற்குள் கொண்டு வர அனுமதித்தனர். இதன் பின் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. புற்றுநோயால் இறந்து போனவரின் உடலை அவரது குடும்பத்தினரே வீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி?

நடுவரின் தவறான தீர்ப்பு... உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய கால்பந்து அணி: கொதிக்கும் ரசிகர்கள்!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் பலி!

விஜயின் ‘GOAT' பட கிளைமாக்ஸ் காட்சி இது தான்... மாஸ் சம்பவம் செய்த வெங்கட்பிரபு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் பலி; 6 பேர் படுகாயம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in