நடுவரின் தவறான தீர்ப்பு... உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய கால்பந்து அணி: கொதிக்கும் ரசிகர்கள்!

வெளியில் சென்ற பந்தை கோலாக அறிவித்த நடுவர்
வெளியில் சென்ற பந்தை கோலாக அறிவித்த நடுவர்
Updated on
1 min read

கத்தாருக்கு எதிரான கால்பந்து போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்பு காரணமாக இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பலம் வாய்ந்த கத்தார் அணியை இந்திய அணி நேற்று எதிர்கொண்டது. துவக்கம் முதலே பரபரப்பாக இருந்த இந்த போட்டியில் கத்தார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 37வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தியது. லாலியன்ஜுவாலா சாங்க்டே சிறப்பாக விளையாடி இந்த கோலை அடித்திருந்தார்.

இதன் பின்னர் 73 வது நிமிடத்தில் கத்தார் அணியின் யூசுப் ஏமன் மற்றும் 85 வது நிமிடத்தில் அஹ்மத் அல்-ராவி ஆகியோர் இரண்டு கோல்களை அடித்து கத்தாரின் வெற்றிக்கு வழி வகுத்தனர். தற்போது 73 வது நிமிடத்தில் அடிக்கப்பட்ட கோல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கோல் போஸ்டில் அருகே எல்லைக்கோட்டை தாண்டிய பந்தை, யூசுப் ஏமன் மீண்டும் உள்ளே இழுத்து கோல் போஸ்ட்க்குள் அடித்தார். விதிமுறைப்படி எல்லைக்கோட்டை தாண்டியதால், பந்து வெளியே சென்றதாக கருத வேண்டும். ஆனால் நடுவர் இந்த கோலை அங்கீகரித்ததால் இந்திய அணி இறுதி நேரத்தில் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்

தற்போது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவிட்டு இந்திய கால்பந்து ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கிரிக்கெட்டில் டிஆர்எஸ் முறை உள்ளது போல், கால்பந்து போட்டிகளில் விஏஆர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையை பயன்படுத்தி இந்த கோலை மறுபரிசீலனை செய்யாதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் நடுவர் கத்தார் அணிக்கு சாதகமாக ஒருதலை பட்சமாக நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in