தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும்? - சத்யபிரதா சாகு விளக்கம்!

சத்யபிரதா சாகு
சத்யபிரதா சாகு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாக, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஜூம் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஜூம் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்று எண்ணிக்கைக்கு முன், தபால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும். காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணத் தொடங்கி, 30 நிமிடங்களுக்கு பிறகே, காலை 8.30 மணிக்கு இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

சத்யபிரதா சாகு
சத்யபிரதா சாகு

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை குறித்தும் அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான பிரச்னைகளும், ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்குள், பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி உபயோகிக்க அனுமதி கிடையாது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுப் பார்வையாளர்கள் தமிழகம் வந்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in