சந்திரபாபு நாயுடு ஜெயித்த ஐந்தே நாளில் நடந்த அதிசயம்... பங்குகள் மதிப்பில் மனைவிக்கு ரூ.535 கோடி; மகனுக்கு ரூ.237 கோடி உயர்வு

மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சந்திரபாபு நாயுடு
மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இம்முறை மகத்தான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் அவரது குடும்ப நிறுவனத்தின் மதிப்பு பங்குச்சந்தையில் எகிறி வருகிறது.

நாட்டில் அரசியல் மாற்றம் எதுவானாலும் அவை பங்குச்சந்தையை நேரடியாக பாதிக்கக்கூடியவை. இந்த வகையில் மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியானதில் உச்சம் தொட்ட பங்குச்சந்தை, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பாதாளத்தில் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ30 லட்சம் கோடி இழப்பு நேரிட்டது. இது தொடர்பாக மோடி - அமித் ஷா ஆகியோருடன் தொடர்புடைய பெரும் பங்குச்சந்தை ஊழல் நடந்திருப்பதாகவும், நாடாளுமன்ற கூட்டுக்குழு அதனை விசாரிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கோரி உள்ளது.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் தயாரிப்புகள்
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் தயாரிப்புகள்

இந்த வரிசையில், தேர்தல் முடிவுகளையொட்டிய இன்னொரு பங்குச்சந்தை மாற்றம், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தை முன்வைத்து எழுந்துள்ளது. சந்திரபாபுவின் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் பங்கு மதிப்பு, தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றியை அடுத்து வெகுவாக உயர்வு கண்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களில் ஹெரிடேஜ் ஃபுட்ஸின் பங்குகள் 55 சதவீதம் உயர்வு கண்டுள்ளன. இது அந்த நிறுவனத்தின் பெரும் பங்குகளைக் கொண்டிருக்கும் சந்திரபாபுவின் மனைவி மற்றும் மகனின் சொத்து மதிப்பு எகிறவும் காரணமானது.

சந்திரபாபு நாயுடு 1992-ல் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தை நிறுவினார். பால் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என இரு வணிகப் பிரிவுகள் உள்ளன. ​ஆந்திரா மட்டுமன்றி தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஹெரிடேஜ் பால் மற்றும் பால் பொருட்களின் வணிகம் பரவிக் கிடக்கிறது. சந்திரபாபு நாயுடு மனைவியும் என்டிஆர் மகளுமான நாரா புவனேஷ்வரி இந்த நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக இருக்கிறார். இவருக்கு 2,26,11,525 பங்குகளும், மகன் நாரா லோகேஷ்-க்கு 1,00,37,453 பங்குகளும் நிறுவனத்தில் இருக்கின்றன.

என்டிஏ கூட்டணியில் சந்திரபாபு நாயுடு
என்டிஏ கூட்டணியில் சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதல்வராக பதவியேற்க இருப்பதோடு, பாஜக கூட்டணி அரசின் அச்சாணியாக மாறுவதன் மூலம் மத்திய அரசிலும், அமைச்சரவையிலும் பங்கேற்க இருக்கிறார். இதனால் இவரது குடும்ப நிறுவனமான ஹெரிடேஜ் ஃபுட்ஸின் பங்குகள் நாளுக்கு நாள் எகிறின.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் தினம் அதாவது, ஜூன் 3 அன்று பங்கு ஒன்று ரூ424க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அதுவே இன்றை தினம் ஒரு பங்கின் மதிப்பு ரூ661.25 என்பதாக உயர்வு கண்டுள்ளது. இந்த வகையில் நாரா புவனேஷ்வரிக்கு ரூ.579 கோடி உயர்வுக்கு ஹெரிடேஜ் ஃபுட்ஸ் வழி வகுத்தது. இந்த வகையில் மகன் லோகேஷ்க்கு ரூ237.80 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in