மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

மோடியுடன் அண்ணாமலை
மோடியுடன் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தவிடு பொடியாகும் வகையில் இந்தியா கூட்டணி ஏராளமான இடங்களைக் கைப்பற்றியது.

மு.க.ஸ்டாலினுடன், ராகுல் காந்தி.
மு.க.ஸ்டாலினுடன், ராகுல் காந்தி.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளன. இதன் காரணமாக அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அமைச்சரவை குறித்த பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்துள்ளது.

எல்.முருகன்
எல்.முருகன்

இந்த மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள் பலர் படுதோல்வியடைந்துள்ளனர். இதனால், அமைச்சரவையில் இருந்த 20 பேர் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். அதில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன், மத்திய ஜல்சக்தி அமைச்சராகவும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் இருந்த ராஜீவ் சந்திரசேகர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சரான அஜய்குமார் மிஸ்ரா, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக இருந்த அர்ஜூன் முண்டா, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராக இருந்த ராஜ்குமார் சிங், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்த முரளிதரன் ஆகியோரும் இந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சரவை பொறுப்புகள் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லி இல்லத்தில் மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இலாகாக்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஜே.பி.நட்டாவும், அமித்ஷாவும் ஆலோசித்துள்ளனர்.

வானதி - தமிழிசை
வானதி - தமிழிசை

இதில், பாதுகாப்புத்துறை, நிதித்துறை, உள்துறை, ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்து துறைகளைத் தக்க வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும், விமானப் போக்குவரத்துத் துறை, இரும்பு மற்றும் உருக்கு சார்ந்த துறையை கூட்டணி கட்சிக்கு தர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

அத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in