இந்தியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்: முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

புதிய உத்வேகத்துடன் நாளை (ஜூன் 4-ஆம் தேதி) இந்தியா கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கருணாநிதியின் உருவப்படத்துக்கு டெல்லியில் அஞ்சலி
கருணாநிதியின் உருவப்படத்துக்கு டெல்லியில் அஞ்சலி

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்தியா கூட்டணியின் தலைவர்களான மதிப்பிற்குரிய சோனியா காந்தி, என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி, மதிப்பிற்குரிய பரூக் அப்துல்லா, தோழர் சீதாராம் யெச்சூரி மற்றும் தோழர் டி.ராஜா ஆகியோர் புதுடெல்லியில் ஒன்று கூடி கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவில் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம். கூட்டாட்சி மற்றும் ஜனநாயகத்திற்காக தலைவர் கலைஞரின் உறுதியான ஆதரவு தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகித்தது. மிகவும் இக்கட்டான காலங்களில், அவர் மத்திய அரசில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தினார்.

இந்தியாவின் பல பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் அவரது முக்கிய பங்கு நாட்டின் அரசிலையே சிறப்பாக வடிவமைத்தது.

புதிய உத்வேகத்துடன் ஜூன் 4-ஆம் தேதி நமது கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம் . இது இந்திய மக்களின் வெற்றியாக அமையும் ' என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in