மீண்டும் கட்டுப்பாடுகள்... விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு பணம் கொண்டுசெல்வதை கண்காணிக்கும் பணி தீவிரம்!

பறக்கும் படை வாகனங்களை துவக்கி வைத்த விழுப்புரம் ஆட்சியர் பழனி இ.ஆ.ப
பறக்கும் படை வாகனங்களை துவக்கி வைத்த விழுப்புரம் ஆட்சியர் பழனி இ.ஆ.ப

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் பறக்கும் படை வாகனத்தை துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணி செய்ய உள்ளனர்.

நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர்
நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர்

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு வாகனத்தை இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த ஆட்சியர், ”தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லகூடாது. விக்கிரவாண்டி எல்லைப்பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்” என்றார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து ஜூன் 6ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் சில நாட்களிலேயே விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in