விஜய் மல்லையா, நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோட இதுவே காரணம்... விசாரணை அமைப்புகளுக்கு நீதிமன்றம் குட்டு

விஜய் மல்லையா - நீரவ் மோடி
விஜய் மல்லையா - நீரவ் மோடி

விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததே, விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் வெளிநாட்டுக்குத் தப்பியோட காரணமானது என்று, வழக்கொன்றின் விசாரணையில் மும்பை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பலநூறு முதல் பல்லாயிரம் கோடி வரை பணமோசடி செய்துவிட்டு, விசாரணை எழுந்துததும் அதிலிருந்து தப்பிக்க வெளிநாட்டு தப்பியோடும் கோடீஸ்வரர்கள் அதிகரித்து வருகின்றனர். மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட பலர் இந்த வகையில் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்திய விசாரணை அமைப்புகளின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க, தங்களது பணபலத்தால் அங்கிருந்தபடியே இந்திய நீதிமன்றங்களில் சட்ட போராட்டங்களையும் தொடுத்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும், கல்விக்கடனுக்காக மாணவர்கள் தடுமாறுவதும், தவணை தவறியதற்காக கடன் வாங்கியவர் குடும்பத்தினரை வங்கிகள் அவமானப்படுத்துவதும் இந்தியாவில் பரவலாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவற்றின் மறுபக்கத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கிய பெருமுதலைகள் வெளிநாடுகளுக்கு தப்பியோடி வருகின்றன. இவற்றின் மத்தியில் விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்யாததே அவர்கள் தப்பியோட காரணம் என மும்பை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஜாமீன் நிபந்தனையை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே இவ்வாறு தெரிவித்தார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வியோமேஷ் ஷா என்பவர், வெளிநாடு செல்ல நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறுவதற்கான ஜாமீன் நிபந்தனையை கைவிடக் கோரிய மனுவை ஏற்றுக் கொண்ட கையோடு நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்தது. வியோமேஷ் ஷாவின் மனுவுக்கு அனுமதி வழங்குவது நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் மெகுல் சோக்ஸி போன்ற முந்தைய சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்று அமலாக்கத்துறை வாதிட்டது.

நீதிமன்ற விசாரணை
நீதிமன்ற விசாரணை

அந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, "சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்தது கைது செய்யாததால், அவர்கள் தப்பி ஓடினர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

ஆனால் முந்தைய மோசமான உதாரணங்களுக்கு மாறாக, சம்மனுக்கு பதிலளித்த வியோமேஷ் ஷா நீதிமன்றத்தில் ஆஜரானதோடு, ஜாமீன் பெற்று வெளிநாடு செல்ல பலமுறை விண்ணப்பித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார். இந்த வகையில் வியோமேஷ் ஷாவின் வழக்கை நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்ஷி போன்றவர்களின் வழக்குகளுடன் ஒப்பிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in