மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு இலவச வீடு: நெகிழவைத்த தமிழக வெற்றிக்கழகம்!

மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்த தமிழக வெற்றிக்கழகம்
மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்த தமிழக வெற்றிக்கழகம்
Updated on
1 min read

தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு வழங்கி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அசத்தியுள்ளது.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி, கட்சியை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்த வரிசையில் வீடு இல்லாத ஏழை எளியோருக்கு தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறார்.

அவரது அன்பு கட்டளையை ஏற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணியினர், இலவச படிப்பகம், குருதி கொடை முகாம், சாலையோர மக்களுக்கு குளிர் கால போர்வை மற்றும் உணவு வழங்குவது போன்ற மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இலவச வீடு
இலவச வீடு

இதில் ஒரு பகுதியாக, கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணியினர், தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்து , வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கி அசத்தியுள்ளனர்.

இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பயனாளியிடம் வீட்டின் சாவியை வழங்கி, வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வழங்கினார். மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துள்ள அந்த குடும்பத்தினருக்கு சரியான ஒரு இடம் இல்லாததால் தவித்து வந்த நிலையில், களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த, தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு, உடனடியாக தனது நிர்வாகிகள் உதவியுடன் சுமார் ஒன்றரை இலட்சம் மதீப்பீட்டில் இலவச வீட்டை கட்டி வழங்கியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு: இளைஞர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in