5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!

மாடுகளைப் பரிசோதனை செய்யும் மருத்துவர்
மாடுகளைப் பரிசோதனை செய்யும் மருத்துவர்
Updated on
1 min read

ஓட்டலில் எஞ்சிய பரோட்டாவை சாப்பிட்ட 5 மாடுகள் உயிரிழந்த சம்பவம் கொல்லம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலம், கொல்லம் அருகே வட்டப்பாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹசபுல்லா. விவசாயியான இவர் மாட்டுப்பண்ணை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது கால்நடைகளுக்கு ஓட்டலில் மிஞ்சிய பரோட்டாக்களை நேற்று மாலை உணவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைச் சாப்பிட்ட சில மணி நேரங்களில் 5 மாடுகள் உயிரிழந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹசபுல்லா உடனடியாக, கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த மாவட்ட கால்நடை மருத்துவ மையத்தின் அவசரகால மீட்புக்குழுவினர், உயிரிழந்த மாடுகளை பரிசோதனை செய்தனர். அப்போது மாடுகளுக்கு கொடுக்கப்பட்ட தீவனத்தில் பரோட்டா, பலாப்பழம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது.

இதன் காரணமாக உணவு ஜீரணமாகாமல், வயிற்றுக்கோளாறு ஏற்பட்டு 5 மாடுகளும் உயிரிழந்தது தெரிய வந்தது. எனவே, அதிகமாக பரோட்டா, பலாப்பழம், சோறு ஆகியவற்றை கால்நடைகளுக்கு வழங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுததியுள்ளனர். உயிரிழந்த மாடுகளுக்கு பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கேரள கால்நடை துறை அமைச்சர் செ.சிஞ்சுராணி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மாட்டுத் தீவனம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அத்துடன் மாடுகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in