சீமானுக்கு வாழ்த்து சொன்ன விஜய்; விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பாராட்டு!

சீமான் விஜய்
சீமான் விஜய்

மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறவுள்ள நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

ம்க்களவைத் தேர்ர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில், திருச்சி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், 12 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 8 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெற்றதன் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி அங்கீகாரத்தை பெறுவதற்கான தகுதியை எட்டியுள்ளது.

திருமாவளவன்
திருமாவளவன்

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் 2.25 சதவீதம் வாக்குகளைப் பெற்றதால் விசிக மாநிலக் கட்சி அங்கீகாரம் பெறவுள்ளது.

இந்த இரு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் இதுதொடர்பாக உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், அதனை தேர்தல் ஆணையம் பரிசீலித்து மாநில கட்சிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில கட்சி அங்கீகாரம் பெற்றால், கட்சிகளின் சின்னம் உறுதி செய்யப்படுவது உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in