வாழ்த்து மட்டும் போதாது... வா தலைவா வா; விஜயை ஆக்டிவ் அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்!

விஜய்
விஜய்
Updated on
2 min read

தனிக் கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் ’வாழ்த்துகள்’ பகிர்வதற்கு அப்பால் ஆக்டிவ் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் எதிரொலித்து வருகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் என தனிக்கட்சியை ஆரம்பித்தார் நடிகர் விஜய். தற்போது கைவசமிருக்கும் திரைப்படத்தோடு சினிமாவுக்கு முழுக்குப் போட்டு, முழுநேர அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். மேலும் மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தயாராகும்படியும் தனது ரசிகத் தொண்டர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்

அவர்களும் கடந்த 4 மாதங்களாக உற்சாகம் வடியாது காத்திருக்கின்றனர். ஆனால் அரசியக் கட்சி அறிவிப்புக்கு அப்பால் ஆக்டிவ் அரசியலுக்கான அறிவிப்போ, விளக்கமோ, விமர்சனமோ, மக்கள் பிரச்சினைகள் குறித்தான விசனமோ நடிகர் விஜய் தரப்பிலிருந்து வெளிப்படவில்லை. இது தவிர்த்து கொள்கைகள், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தான அறிவிப்புகளும் விஜயிடமிருந்து கிடைக்கவில்லை.

அன்னையர் தின வாழ்த்து
அன்னையர் தின வாழ்த்து

வெங்கட் பிரபு இயக்கத்திலான ’கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்துக்கான ஒரு சில அப்டேட்டுகள் தவிர்த்து, அரசியல் மற்றும் சமூக ஊடாட்டம் எதுவும் விஜய் தரப்பில் இல்லை. மற்றபடி மே தினம், அன்னையர் தினம், தலைவர்கள் பிறந்த தினம் ஆகியவற்றின்போது விஜய் பெயரில் வாழ்த்துகள் வெளியாகும். அதன் பிறகு தேர்தல் பரபரப்பின் மத்தியில் அரசியல் கட்சிகளுக்கும் வாழ்த்துகளை பகிர்ந்திருக்கிறார் விஜய். இவற்றை முன்வைத்து வாழ்த்து பகிர்வது மட்டும்தான் விஜயின் அரசியலா என சமூக ஊடக தளங்களில் மீம்ஸ் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தன.

’தமிழக வெற்றிக் கழகம்’ அல்ல ’தமிழக வாழ்த்துக் கழகம்’ என டிவிகே கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் சிலர் விஜய் ரசிகர்களை சீண்டி வருகின்றனர். இப்படி அண்மைக்காலமாக விஜய் வெளியிட்ட வாழ்த்துகளை தொகுத்து சிலர் விஜயை கிண்டலடித்து வருகின்றனர். இதனால் திடீரென சமூக ஊடகங்களின் மீம் மெட்டீரியலானார் விஜய். சுதாரித்த விஜய் தரப்பில் இன்றைய தினம் பள்ளி பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இரு கட்டமாக விழா நடத்த இருப்பதாக இன்று அறிவிப்பு வெளியிட்டது.

மீம் மெட்டீரியலான விஜயின் வாழ்த்துகள்
மீம் மெட்டீரியலான விஜயின் வாழ்த்துகள்

விஜயின் வாழ்த்து அரசியலை கிண்டலடித்தவர்களுக்கு, இந்த நலத்திட்ட உதவிகள்தான் விஜயின் பாணி அரசியல் என விஜய் ரசிகர்கள் பதிலடி தந்து வருகின்றனர். மேலும், ஆந்திராவின் பவன் கல்யாண் முதல் பிரதமராகும் மோடி வரை வாழ்த்து பகிர்ந்திருக்கும் விஜய், தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகளோடு தனது வாழ்த்து பகிர்வை நிறுத்திக்கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என பொதுவான வாழ்த்தோடு சுருக்கிக் கொண்டார். 40க்கு 40 வென்ற திமுக கூட்டணியின் வெற்றிக்கு அவரிடமிருந்து வாழ்த்து வராது போகவே, விஜயை குறிவைத்து திமுக அபிமானிகளால் வாழ்த்து விவகாரம் விரிவாக வறுக்கப்படுவதாக விஜய் ரசிகர்கள் குறைபடுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in