சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அகிலேஷ் யாதவ், தனது சமூக ஊடகங்களில் இரண்டு வரைபடங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால், அவை பொய்யாகிப்போனது. பாஜகவுக்கு 240 இடங்கள்தான் கிடைத்தன. பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் 53 எம்.பிக்கள் ஆதரவுடன் பாஜக புதிய ஆட்சியை அமைத்துள்ளது.

பதவியேற்பு விழாவில் மோடி
பதவியேற்பு விழாவில் மோடி

இந்த தேர்தலில் பாஜக பெரிதும் எதிர்பார்த்த உத்தரப்பிரதேச மாநிலம், அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது. அத்துடன் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அதிக ஆதரவை அளித்துள்ளது. இதனால் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த சமாஜ்வாதி கடசி இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் தனது சமூக ஊடகத்தில் அகிலேஷ் யாதவ், இன்று இரண்டு வரைபடங்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு வரைபடம் 2019 மக்களவைத் தேர்தல் முடிவையும், மற்றொன்று 2024 முடிவையும் காட்டுகிறது.

" சில தேர்தல்கள் வரைபடத்தை மாற்றுகின்றன. பகிரப்பட்ட வரைபடத்தின்படி, 2019-ல் பாஜகவுக்கு 62 இடங்களும், சமாஜ்வாடிக்கு 5 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 1 இடமும் கிடைத்தன. ஆனால், இப்போது வரைபடம் மாறிவிட்டது. 2024-ல் பாஜகவுக்கு 33 இடங்களும், சமாஜ்வாதி கட்சிக்கு 37 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும் கிடைத்தன. அதே சமயம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இம்முறை பூஜ்ஜிய இடங்களே கிடைத்துள்ளன என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in