உத்தரபிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் டிக்கெட் இன்றி கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் பயணிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் என்ற அதிவேக சொகுசு பயணத்திற்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமான வழித்தடங்களில் பயணிக்கும் ரயில்களை விட அதிக வேகம், பல்வேறு அதிநவீன வசதிகள் என வந்தே பாரத் ரயில்களுக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இருப்பினும் வந்தே பாரத் ரயில் காரணமாக பிற ரயில் சேவைகள் தாமதப்படுத்தப்படுவதாக பயணிகள் இடையே குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
மேலும் கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்படுவதால் சாமானிய பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலை இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த ரயில்களில் பயணிக்க ஏற்கனவே முன்பதிவு செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் 5 முதல் 10 நாட்கள் முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும். இதனிடையே உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெஹ்ராடூன் வரை வந்தே பாரத் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கடந்த ஜூன் 9ம் தேதி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில், தற்போது வேகமாக பரவி வருகிறது.
முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்கும் இந்த ரயிலில், முன்பதிவு செய்யாத மற்றும் டிக்கெட் எடுக்காத ஏராளமான பயணிகள் கூட்டமாக ரயிலில் நின்றபடி பயணிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியதற்கான நோக்கம் நிறைவேறாமலே போவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!
விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!
போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!
வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!