பால் வாங்க தனியாகச் சென்ற பெண்ணை வாயை மூடி... வெளியான அதிர்ச்சி வீடியோ!

பால் வாங்க தனியாகச் சென்ற பெண்ணை வாயை மூடி... வெளியான அதிர்ச்சி வீடியோ!

பால் வாங்க தனியாகச் சென்ற பெண்ணை வாயை மூடி தூக்கிச் சென்ற பாலியல் பலாத்காரம் செய்ய ஒருவர் முயற்சி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹாவில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அம்ரோஹாவில் வெறிச்சோடிய தெருவில் பால் வாங்க தனியாகச் சென்ற பெண்ணை ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். அத்துடன் அந்த பெண்ணின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அம்ரோஹா
அம்ரோஹா

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன்னைக் காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரிடமிருந்து பெண்ணை மீட்டுள்ளனர். அப்போது பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயன்றவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது தனியாகச் சென்ற பெண்ணை ஒருவர் பின் தொடர்வதும், ஒரு இடத்தில் அந்த பெண்ணை வழிமறிப்பதும் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவில் இருப்பவர் குறித்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பெண்ணிடம் தகாத முறையில் நடந்தவர் பெயர் ரஹ்மான் என்பதும், அவர் பலாத்காரம் செய்ய முயன்றது ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ரஹ்மானை போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், பெண்ணைப் பலாத்காரம செய்ய ரஹ்மான் பின் தொடர்ந்து செல்லும் வீடியோவும், போலீஸார் அவரை கைத்தாங்கலாக அழைத்து வரும் வீடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in