மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக்கொலை; பாஜக மீது குற்றச்சாட்டு

திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக் கொலை
திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக் கொலை

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக உறுதிபட மறுத்துள்ளது.

உள்ளூர் வட்டார தகவலின் படி, திரிணமூல் காங்கிரஸ் தொண்டரும், பால் வியாபாரியுமான சனாதன் கோஷ், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில், கஜினிபூரிலிருந்து பாரா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பாஜக - திரிணமூல் காங்கிரஸ்
பாஜக - திரிணமூல் காங்கிரஸ்

வீட்டின் அருகே சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு சத்தம், அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்குவந்தனர். அப்போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த சனாதன் கோஷை மீட்டு, உடனடியாக ஹரிஹர்பாரா பிளாக் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சனாதன் கோஷை, பஹரம்பூரில் உள்ள முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். ஆனால் அவரது உடலில் பல துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்ததால், சனாதன் கோஷ் உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக அவருக்கு நெருக்கமான திரிணமூல் காங்கிரஸின் மற்றொரு தொண்டர் கூறுகையில், "சனாதன் மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக நன்றாக செயல்பட்டதால் இந்த கொலையின் பின்னணியில் பாஜக இருக்கலாம்" என்றார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அம்மாநில பாஜக தலைவர்கள் உறுதிபட மறுத்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. முதல்கட்ட விசாரணையில், இந்தக் கொலைக்கு முன்விரோதம் மற்றும் நிலத் தகராறு காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in