குற்றப் பின்னணியை தமிழிசை நிரூபித்தால் பாஜகவில் இருந்து விலகுகிறேன்... திருச்சி சூர்யா அதிரடி!

திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா

"பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகிக் கொள்கிறேன்" என்று பாஜக பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா பகீரங்கமாக அறிவித்துள்ளார்.

குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் அதிகபேர் பாஜகவில் இணைந்துள்ளதாக சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கட்சிக்குள் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரை கண்டித்து சமூகவலைதளங்களில் பாஜக நிர்வாகிகள் பதிவிட்டு வருகின்றனர். தமிழிசையின் பேச்சை கடுமையாக கண்டித்து சூர்யா சிவா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா? என்று கேள்வியும் கேட்டு இருந்தார்.

விருதுநகர் வேட்பாளரை நேரில் சந்தித்த சூர்யா சிவா
விருதுநகர் வேட்பாளரை நேரில் சந்தித்த சூர்யா சிவா

இந்நிலையில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை, மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் திருச்சி சூர்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் தமிழிசையின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் திமுகவில் இருந்த போது எனது மகன் பிறந்த நாளுக்கு தமிழிசை அக்கா வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் என் மீது பாசமானவர். ஆனால் கட்சி ரீதியாக பார்த்தால் அவர் தலைவராக இருக்கும்போது நான் பாஜகவிற்கு வரவில்லை. அவரைப் பரட்டை என்று கூறிய போது அவருக்கு கோபம் வந்தது. ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதை திமுகவினர் திட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். தற்போது கட்சியில் இருப்பவர்கள் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை. அப்படி இருந்தாலும் அது முன்னாள் இருந்த தலைவர்களால் தான் இருக்கும். ஆனால் சம்பந்தமில்லாமல் எங்கள் தலைவரை குற்றம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in