இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் | 'உலகத் தமிழ் நாளாக' அறிவிக்க கோரி உலகளவிலான தமிழ் அமைப்புகள் தீர்மானம்!

இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் | 'உலகத் தமிழ் நாளாக'  அறிவிக்க கோரி உலகளவிலான தமிழ் அமைப்புகள் தீர்மானம்!

இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 29ம் தேதியை உலகத் தமிழ் நாளாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து உலகளவில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

அமெரிக்காவில் இயங்கி வரும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், இலெமுரியா அறக்கட்டளை, பெங்களூருவின் தமிழ் அறக்கட்டளை, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம், பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ம் நாளை 'உலகத் தமிழ் நாள்' ஆக‌ அறிவிக்கவும், சென்னையில் பாரதிதாசன் ஆய்வு மணிமண்டபம் அமைக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பாரதிதாசனின் பேரனும், பாரதிதாசன் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருமான கோ.பாரதி, மலேசியாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நல்லுரையாளர் திரு.மன்னர் மன்னர், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத்தலைவர் திரு.இரா.திருமாவளவன் உள்ளிட்டோர் பாரதிதாசன் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து, மூன்று தீர்மானங்களை முன்மொழிந்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் முனைவர் பாலா.சுவாமிநாதன் கருத்துரை வழங்கினார். இந்த தீர்மானங்களை முன்மொழிந்து உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநரும், தமிழறிஞருமான பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் விளக்கவுரை ஆற்றினார்.

இதையும் வாசிக்கலாமே...


ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in