சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை துவங்குங்கள்... அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சதுப்பு நிலம்
சதுப்பு நிலம்

"தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும்" என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், 2018-ம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு
தமிழக அரசு

அப்போது, தமிழக அரசுத்தரப்பில், முன்னோடி திட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சதுப்பு நிலங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

மேலும், மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போதைக்கு நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இப்பணிகளுக்காக நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள அரசுக்கு அனுமதியளித்து, வழக்கின் விசாரணையை ஜூலை முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in