பெற்றோருடன் உறங்கிய 5 மாத குழந்தை மாயம்; 2 மணி நேரத்தில் மீட்டது போலீஸ் - தஞ்சையில் பரபரப்பு

மாயமான 5 மாத கைக்குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த பூதலூர் போலீஸார்
மாயமான 5 மாத கைக்குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த பூதலூர் போலீஸார்

தஞ்சாவூர் அருகே பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த 5 மாத குழந்தை அதிகாலையில் மாயமான நிலையில், 2 மணி நேரத்தில் அந்தக் குழந்தையை மீட்டு போலீஸார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் திலீப் மற்றும் ஷோபா தம்பதியினர். இவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி இருந்து, கீ செயின் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 5 மாதமேயான மணிகண்டா என்ற கைக்குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் வழக்கமாக பூதலூர் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பார்மில் குழந்தையுடன் இரவு நேரத்தில் உறங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு குழந்தையுடன் தம்பதிகள் இருவரும் படுத்து உறங்கி உள்ளனர்.

குழந்தையை மீட்ட போலீஸார்
குழந்தையை மீட்ட போலீஸார்

இன்று அதிகாலை 3 மணியளவில் ஷோபா எழுந்து பார்த்தபோது தனது அருகில் தூங்கிக் கொண்டிருந்த 5 மாத கைக்குழந்தை மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக திலீப்பை எழுப்பி குழந்தையை ரயில் நிலையம் முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை எங்கும் கிடைக்காததால் உடனடியாக அவர்கள் பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்த போலீஸார் குழந்தையை தேடும் பணிகளை முடுக்கிவிட்டனர். ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் அதன் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.

தஞ்சை பூதலூர் காவல் நிலையம்
தஞ்சை பூதலூர் காவல் நிலையம்

இந்த நிலையில் ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் புதர் ஒன்றில் குழந்தை கிடப்பது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக குழந்தையை பெற்றோருடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குழந்தையை யாரும் கடத்திச் சென்றார்களா, அல்லது குழந்தை தானாகவே தவழ்ந்து சென்று விட்டதா என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை மாயமான 2 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸாரின் செயலுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in