தை அமாவாசை... தமிழகம் முழுவதும் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தை அமாவாசை... தமிழகம் முழுவதும் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
Updated on
2 min read

இன்று தை அமாவாசை மற்றும் தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இராமேஸ்வரம்  அமாவாசை தர்ப்பணம்
இராமேஸ்வரம் அமாவாசை தர்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பித்ரு பூஜைகள் செய்ய குவிந்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கும் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதே போன்று நாளை பிப்ரவரி 10, 11 (சனி, ஞாயிறு) தேதிகளில் வளர்ப்பிறை சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் வார கடைசி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதே போன்று பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in