குளத்தில் அசையாமல் கிடந்த போதை ஆசாமி: இறந்துவிட்டதாக நினைத்து உடலை இழுத்த போலீஸாருக்கு அதிர்ச்சி; வைரல் வீடியோ!

குடிபோதையில் குளத்தில் படுத்துக்கிடந்த நபரால் பரபரப்பு
குடிபோதையில் குளத்தில் படுத்துக்கிடந்த நபரால் பரபரப்பு

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் குளத்து நீரில் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்த போலீஸார், அந்த நபரை இழுத்த போது, போதையில் உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு உள்ளூர்காரர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தண்ணீரில் மிதந்த வாலிபர் உடலை இழுத்தனர். அப்போது திடீரென அந்த நபர் எழுந்து திரும்பி பார்த்ததால் போலீஸாரும், அவசர கால மீட்பு குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை கரைக்கு கொண்டு வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர் தண்ணீரில் பல மணி நேரம் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அவர் இறந்துவிட்டதாகக் கருதி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது தெரியவந்தது.

மேலும், அந்த நபர் கடந்த 10 நாட்களாக கிரானைட் குவாரியில் கொளுத்தும் வெயிலில் 12 மணி நேரம் வேலை செய்ததாகவும், ஓய்வெடுக்கவும் குளிர்ச்சிக்காகவும் தண்ணீரில் இறங்கி படுத்துக் கிடந்ததாகவும் போலீஸாரிடம் விளக்கம் அளித்தார்.

குடிபோதையில் குளத்தில் உறங்கிய நபர்
குடிபோதையில் குளத்தில் உறங்கிய நபர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in