தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் நிச்சயம் இதை செய்யவேண்டும்: ஆம் ஆத்மி திடீர் வேண்டுகோள்!

ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங்
ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங்

அரசியலமைப்பு, ஜனநாயக நலன் கருதி மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் போட்டியிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 71 அமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றனர். இந்நிலையில் நேற்று அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று அவர்கள் தங்கள் துறைகளில் பொறுப்பேற்றனர்.

மக்களவை சபாநாயகர் தேர்தல்
மக்களவை சபாநாயகர் தேர்தல்

இந்நிலையில் 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜூன் 24ம் தேதி துவங்கும் என்றும் முதல் இரண்டு நாள்களில் புதிய எம்பி-க்கள் பதவி ஏற்பு அதைத் தொடர்ந்து ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயக நலன் கருதி மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் போட்டியிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியதாவது: “நேற்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சகம் அறிவிக்கப்பட்டது. இது மோடி 3.0 அரசாங்கம் என்று அழைக்கப்படுகிறது. அமைச்சர் பதவியைப் பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்
பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்

எனவே, குறைந்தபட்சம் சபாநாயகர், ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தேர்வாக வேண்டும் என அந்த கட்சிகளை நான் வலியுறுத்துவேன். இது அவர்களின் கட்சி மற்றும் அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் நலனுக்காக இருக்கும். சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தினால், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.” இவ்வாறு சஞ்சய் சிங் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in