‘பாஜகவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவே சபாநாயகர் பதவியை கேட்கிறார் சந்திரபாபு நாயுடு’ - விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

மீண்டும் மக்களவையில்; விசிக தலைவர் தொல்.திருமாவளவனுடன் ரவிக்குமார்
மீண்டும் மக்களவையில்; விசிக தலைவர் தொல்.திருமாவளவனுடன் ரவிக்குமார்

’பாஜக-வை நம்பாத சந்திரபாபு நாயுடு, பாஜகவிடமிருந்து தங்கள் கட்சியை காப்பாற்றிக்கொள்ளவே சபாநாயகர் பதவி கேட்கிறார்’ என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமாக மூன்றாம் முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றிருப்பினும், இம்முறை தனிப்பெரும்பான்மை கிட்டாததில் பாஜக சோர்ந்து போயுள்ளது. பாஜவுக்கு 370 இடங்கள், கூட்டணியாக 400 இடங்கள் என்ற இலக்குடன் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக குதித்தது. எதிர்க்கட்சிகளை மிரள வைத்த பாஜகவின் இந்த கணிப்பினை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் உறுதி செய்தன.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானதில், தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பாஜக இழந்திருந்தது. இதனால் கூட்டணிகளுடன் இணைந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கிய இடம் பிடித்துள்ளன.

இவற்றில் பீகாரின் வளர்ச்சிக்கான கோரிக்கையோடு, 3 முதல் 4 கேபினட் அமைச்சர் பதவிகள், பீகார் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து, மாநில அரசின் புதிய திட்டங்களுக்கான நிதியாதாரம் ஆகியவற்றை நிதிஷ் குமார் கேட்டிருப்பதாக தெரிய வருகிறது.

ஆனால் கிங் மேக்கரான சந்திரபாபு நாயுடு ஒரு படி மேலே சென்று சபாநாயகர் பதவியை தங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருவதன் மத்தியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி எம்பியாக மீண்டும் தேர்வாகியுள்ள ரவிக்குமார், ‘பாஜக மீது நம்பிக்கை இல்லாததோடு, அவர்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு கேட்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.

மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்.
மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்.

பாஜக தனது கூட்டணி கட்சிகளை தன்வயப்படுத்த முயற்சிப்பதாக பல மாநிலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்ததுண்டு. மகாராஷ்டிராவில் சிவசேனா, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், தமிழகத்தில் அதிமுக உள்ளிட்டவை இந்த புகார்களை தெரிவித்துள்ளன. இந்த வரிசையில் பாஜக தங்கள் கட்சியையும் கபளீகரம் செய்யப்பார்க்கும் என்ற அச்சம் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடர்கிறது. இதனை மனதில் கொண்டே சந்திரபாபு நாயுடு தற்காப்புக்காக சபாநாயகர் பதவியை கேட்பதாக சொல்லப்படுவதை ரவிக்குமாரும் பிரதிபலித்திருக்கிறார்.

விசிக ரவிக்குமார் மேலும் கூறுகையில், “தனிப்பெரும்பான்மை கிடைக்காத பாஜக, கூட்டணி கட்சிகளின் ஆதரவை மட்டுமே நம்பியிருப்பதால் பாஜக ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியாது. பாஜகவின் கூட்டணி கட்சிகள் தங்களை பாஜகவிடம் பாதுகாத்துக்கொள்ளவே சபாநாயகர் பொறுப்பை கேட்கிறார்கள். பாஜகவுடன் பயணிப்பது ஆபத்து என அவர்கள் அஞ்சுவதால் அந்த கூட்டணி நீடிப்பதும் சந்தேகமே” எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in