வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க நாளை முதல் தடை; மாநில அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க தடை
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க தடை
Updated on
2 min read

தமிழகத்தில் நாளை முதல், வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும், சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், அந்த விதிமுறைகளுக்கு மாறாக, 547 ஆம்னி பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்தாக தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள்

எனவே, விதிமுறைகளுக்கு மாறாக இயக்கப்பட்டு வரும் 547 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் அத்தகைய பேருந்துகளுக்கு அரசு சார்பில் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை கிண்டியில் போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை சுட்டிக்காட்டி போக்குவரத்துத் துறை ஆணையர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், "இது போன்ற விதிமீறல் ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க முடியாது. மீறி அவை இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இந்நிலையில் போக்குவரத்து ஆணையரும், அந்த கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்த கருத்துகளையே எதிரொலித்தார். இவற்றை அனுமதிக்க முடியாது என போக்குவரத்து துறை ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்தார். எனவே நாளை முதல் தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகளுக்கான தடை அமலுக்கு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in