தமிழக அரசுப் பேருந்தில் சீன மொழியா... டிஸ்பிளே பிரச்சினையால் ஏற்பட்ட குழப்பம்!

தமிழக அரசுப் பேருந்தில் சீன மொழியா...  டிஸ்பிளே பிரச்சினையால் ஏற்பட்ட குழப்பம்!

ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில் அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை இடம் பெற்றதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, திருப்பூர், காரைக்குடி, மதுரை, திருச்சி, தேனி, கம்பம், கோவை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இரவு பகலாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன.

தமிழக அரசுப் பேருந்துகளில் உலக பொதுமறையாம் திருக்குறளை இடம் பெற செய்து தமிழின் பெருமைகளை உணர்த்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு பேருந்தில் சீன எழுத்து
அரசு பேருந்தில் சீன எழுத்து

இப்படி தமிழ் பரப்பிக் கொண்டிருக்கும் நிலையில் திண்டுக்கல் டூ பொள்ளாச்சி செல்லும் (TN 57 N 2410) அரசுப் பேருந்தில் இடம் பெற்றிருக்கும் டிஜிட்டல் பெயர் பலகையில் திடிரென சீன மொழி எழுத்துகள் பளிச்சிட்டன. சீன எழுத்துக்களுடனேயே திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சிக்கு அந்தப் பேருந்து சென்றதால் பேருந்தில் ஏற இருந்த பயணிகளும், காத்திருந்த பயணிகளும் மண்டை குழம்பிப் போனார்கள். இந்திக்கே ’கோ பேக்’ சொல்லும் தமிழகத்தில் அதுவும் அரசுப் பேருந்தில் சீன எழுத்துகளா என சிலர் அதிர்ந்தும் போனார்கள்.

இந்தி மொழி
இந்தி மொழி

இது குறித்து போக்குவரத்து துறை ஊழியர்களிடம் கேட்டபோது, "அந்த பேருந்தின் டிஸ்பிளேவில் வரக்கூடிய எழுத்துக்களில் தொழில்நுட்ப கோளாறால் இப்படி தெரிகிறது. அதை விரைவில் சரி செய்து விடுவோம்" என்று சிம்பிளாக முடித்துக் கொண்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in