ஜூன் 3வது வாரத்தில் கூடும் தமிழக சட்டப் பேரவை கூட்டம்? மானிய கோரிக்கை விவாதம் நடைபெற வாய்ப்பு!

தமிழக சட்டப் பேரவைக் கூட்டம்
தமிழக சட்டப் பேரவைக் கூட்டம்

ஜூன் 3வது வாரத்தில் தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் துவங்க வாய்ப்பு உள்ளது என்றும், இதில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டம், கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்றது. அது இந்த ஆண்டின் முதல் பேரவைக் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அப்போது அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், சில நிமிடங்களிலேயே ஆளுநர் தனது உரையை முடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் முற்றியது.

தமிழக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் உரைக்குப் பின்னர் மானிய கோரிக்கைகள் துறை ரீதியாக நடத்தப்பட வேண்டும். ஆனால், அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வர உள்ள சூழல் இருந்ததால், தேர்தல் முடிந்த பின்னர், இக்கூட்டத்தொடரை நடத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து நேற்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில் சட்டப் பேரவையில் துறை ரீதியாக மானிய கோரிக்கைக விவாதங்களை நடத்துவதற்கான நாள் குறித்து முடிவு செய்வதற்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சட்டப் பேரவைக் கூட்டம்
சட்டப் பேரவைக் கூட்டம்

இதைத் தொடர்ந்து தமிழக சபாநாயகர் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். தற்போதைய தகவல்படி, ஜூன் 3வது வாரத்தில் அதாவது வரும் 24ம் தேதி முதல் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் துவங்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in