கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய காலக்கெடு... ஆம் ஆத்மிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம்.
டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம்.ஏஎன்ஐ

டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய ஆகஸ்ட் 10-ம் தேதி வரை காலக்கெடு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி உயர் நீதிமன்ற வளாக விரிவாக்கத்துக்காக, தற்போது ஆம் ஆத்மி அலுவலகம் உள்ள, ரோஸ் அவென்யூ அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 15-ம் தேதிக்குள் காலி செய்யும்படி, ஆம் ஆத்மிக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கெடு விதித்திருந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டித்து தரும் படி, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால்
ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால்

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை காலக்கெடு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், டெல்லி முதல்வராகவும் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்ததைத் தொடர்ந்து, தேசிய கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கும்படி, ஆம் ஆத்மி ஆம் ஆத்மி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை காலி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in