நகைப்பிரியர்கள் அதிர்ச்சி... தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வு!

தங்கம்
தங்கம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 53,160 ரூபாய்க்கு விற்கப்படுவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம்
தங்கம்

மேலும் ஜூன் மாதத்தில் தொடகத்தில் இருந்தும் ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6,630 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 53,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி ஜூன் 11-ம் தேதியான இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆபரண தங்கம்
ஆபரண தங்கம்

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 53,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் உயர்ந்து 6,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை 56,920 ரூபாயாகவும், ஒரு கிராம் தங்கம் 7,115 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை திடீர் ஏற்றத்தினால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in