இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தேதி திடீர் மாற்றம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தேர்வு வாரியம்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜூலை 21ம் தேதிக்கு தேர்வு மாற்றப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மட்டும் 8,643 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில், தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளில் காலியாக உள்ள 1,768 இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பாணை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி), கடந்த பிப்.9ம் தேதி வெளியானது. அதன்படி இடைநிலை ஆசிரியர்பணித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும். இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு பிப்.14-ல் தொடங்கி மார்ச் 15-ம்தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.trb.tn.gov.in எனும் வலைதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். அதனை தொடர்ந்து விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 25ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.

அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்
அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இத்தேர்வு நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், ஜூலை 21ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பணித் தேர்வு கொள்குறி வகை (ஒஎம்ஆர்) விடைத்தாள் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. வினாத்தாள் இரு பிரிவுகளாக இருக்கும். முதல் பிரிவு கட்டாய தமிழ் தகுதித் தேர்வாகும். இதில் 30 கேள்விகள் இடம்பெறும், அதற்கு 50 மதிப்பெண். தேர்வெழுத 30 நிமிடம் அவகாசம் வழங்கப்படும். அதில் குறைந்தது 20 மதிப்பெண் எடுக்க வேண்டும். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்பு இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in