டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... தொடரும் அதிர்ச்சி!

விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
2 min read

டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு விஸ்தாரா விமானம் (எண்: யுகே-611) இன்று மதியம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 177 பயணிகள் மற்றும் ஒரு கைக்குழந்தை பயணித்தனர். இந்நிலையில் இந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு தகவல் வந்தது. எனவே, விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து மதியம் 12:10 மணியளவில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் விரைவாக வெளியேற்றப்பட்டனர்.

விஸ்தாரா விமானம்
விஸ்தாரா விமானம்

பின்னர், விமானத்தை தனி இடத்துக்கு கொண்டு சென்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, விஸ்தாரா விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு, விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதைத் தொடர்ந்து விமானம் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

விஸ்தாராவில், எங்கள் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம்" என்றார்.

ஸ்ரீநகர் விமான நிலையம்
ஸ்ரீநகர் விமான நிலையம்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், விமானங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் என தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதுவரையிலான சம்பவங்களில் தீவிர சோதனைக்கு பின்னர் அவை வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதுபோன்று தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!

வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in