பீகாரில் வரலாறு காணாத வெப்பம்... சுருண்டு விழுந்து 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!

வெப்ப அலை
வெப்ப அலை
Updated on
1 min read

பீகாரில் வெப்ப அலை தாக்கத்தால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 46 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்பக் காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பீகார் மாணவர்கள் வெப்ப அலை
பீகார் மாணவர்கள் வெப்ப அலை

இதற்கிடையே, பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளியில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பீகாரில் வெப்ப அலை தாக்கத்தால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 46 டிகிரி செல்சியசைத் தாண்டி வெப்பம் அதிகரித்துள்ளதால் பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in