நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை மீனவர்கள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை மீனவர்கள்
Updated on
2 min read

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது சக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலை ஓட்டியுள்ள தென் மாநில கடற்கரையோரங்களில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இதனால் மீனவர்கள் சுமார் 61 நாட்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து இருந்தனர். கடந்த 15-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் படகு
தமிழக மீனவர்கள் படகு

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள், சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான படகு ஒன்றில் வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை சுற்றிவளைத்துள்ளது. பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி பார்த்திபன், சாரதி, முரளி, ராமதாஸ் ஆகிய 4 மீனவர்கள் கைது செய்ததோடு, அவர்களது படகையும் சிறைபிடித்து இலங்கையில் உள்ள கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைது
கைது

சுமார் இரண்டு மாத காலத்திற்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் சூறைக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையும் தன் பங்குக்கு தமிழக மீனவர்களை கைது செய்திருப்பது சக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உடனடியாக இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!

நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் வரலாற்றுச் சாதனை!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட வேண்டும்... ராகுலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தல்!

சோகம்... ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் 4 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in