உச்சநீதிமன்ற தீர்ப்பால் எனது திட்டம் தவிடு பொடியாக்கிவிட்டது! தடகள வீராங்கனை டூட்டி சந்த் காட்டம்

தோழி மோனலிசாவுடன் தன்பாலின ஈர்ப்பாளர் டூட்டி சந்த்
தோழி மோனலிசாவுடன் தன்பாலின ஈர்ப்பாளர் டூட்டி சந்த்

தன்பாலின திருமண அங்கீகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, கடந்த 16ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் தன்பாலின திருமண அங்கீகார கோரிக்கையை நிராகரித்தது. மேலும், நாடாளுமன்றமே இதுகுறித்த முடிவுகளை எடுக்கும் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

இது தன்பாலின ஈர்ப்பாளர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள இந்திய தடகள வீராங்கனையான டூட்டி சந்த், உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

டூட்டி சந்த் தோழி மோனலிசாவுடன்
டூட்டி சந்த் தோழி மோனலிசாவுடன்

இது குறித்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தன்னுடைய பார்ட்னர் மோனாலிசாவை திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தன் திட்டங்களை தவிடு பொடியாக்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தனது தோழியுடன் ஐந்து வருடங்களாக ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.

டூட்டி சந்த் தோழி மோனலிசாவுடன்
டூட்டி சந்த் தோழி மோனலிசாவுடன்

மேஜரான தங்களுக்கு, தங்கள் சொந்த வாழ்க்கை குறித்த முடிவுகளை எடுக்க முழு உரிமை உள்ளதாகவும், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணங்களை அனுமதிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என நம்புவதாகவும் கூறியுள்ளார். அதேபோல், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கும் உரிமை இருப்பதைப் போல, அவர்கள் விரும்பும் நபரைத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை இருக்க வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மோனலிசாவுடன் டூட்டி சந்த் தோழி
மோனலிசாவுடன் டூட்டி சந்த் தோழி

தன்பாலின ஈர்ப்பாளர்கள் யாரும், விருப்பமில்லாத யாரையும் தங்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வற்புறுத்தவில்லை. அதை பரஸ்பர விருப்பப்படி செய்கிறோம். அதன் அடிப்படையில் ஒருவர் விரும்பும் வாழ்க்கையை நடத்த அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் . பல நாடுகள் ஏற்கெனவே தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக்கியுள்ள நிலையில், இந்தியாவில் அதை சட்டபூர்வமாக்குவதில் என்ன பிரச்சினை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in