தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள்; இது முற்றிலும் தவறு - மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற சுரேஷ்கோபி அதிரடி!

தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள்; இது முற்றிலும் தவறு - மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற சுரேஷ்கோபி அதிரடி!

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது என்று சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ்கோபி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மோடி அரசின் அமைச்சர்கள் குழுவில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. பிரதமர் மோடி தலைமையில் கேரளாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல சினிமா நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து முதல் முறையாக பாஜக சார்பில் மக்களவைத் தொகுதிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது சுரேஷ்கோபி மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று கேரள மாநிலத்தில் உள்ள ஊடகங்களுக்கு சுரேஷ்கோபி பேட்டியளித்ததாக செய்திகள் வெளியானது. அதன்படி அவர், “எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என ஏற்கனவே பாஜக தலைமையிடம் தெரிவித்திருந்தேன். இருப்பினும் அவர்கள் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஆனால் என்னை விரைவில் பாஜக தலைமை, அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து சினிமாவில் நடிக்க உள்ளதால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் அதனை மேற்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே எனது பதவியைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பாஜக தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்று சுரேஷ்கோபி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

மத்திய அமைச்சரவையில் நேரடி அமைச்சர் பதவியை எதிர்பார்த்து இருந்த சுரேஷ்கோபி, தனக்கு இணை அமைச்சர் பதவி வழங்கியதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இவ்வாறு தெரிவித்து இருக்கலாம் எனவும் தகவல்கள் பரவின. இந்த சூழலில்தான் இதுகுறித்து சுரேஷ் கோபி விளக்கமளித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in