நேற்று பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா; இன்று சோனியாகாந்தி, ராகுலை சந்தித்தார் வங்கதேச பிரதமர்!

சோனியா காந்தி ஷேக் ஹசீனா
சோனியா காந்தி ஷேக் ஹசீனா

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஷேக் ஹசீனா சனிக்கிழமை புதுடெல்லி வந்தடைந்தார். மேலும், ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ராஷ்டிரபதி பவனில் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு விருந்து அளித்தார்.

இதனை தொடர்ந்து ஷேக் ஹசீனா இன்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்தார். இதுகுறித்து அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவில், ‘காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரை இன்று பிற்பகல் டெல்லியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்தார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவுக்கும் காந்தி குடும்பத்துக்கும் இடையே நீண்டகாலமாக நல்ல தொடர்பு உள்ளது. ஷேக் ஹசீனாவின் தந்தையும், வங்கதேசத்தின் நிறுவனத் தலைவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான், அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் நல்லுறவைக் கொண்டிருந்தார். 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது இந்திரா காந்தி அந்நாட்டின் விடுதலைக்கு பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தின் சுதந்திரத்தை அவர் ஆதரித்தார். இது வங்கதேச ஆட்சியாளர்களுக்கு இந்திரா காந்தி மீது நீண்டகால நன்றியுணர்வையும் பரஸ்பர மரியாதையையும் வளர்த்தது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in