பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு சம்மன்

எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா
எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா
Updated on
2 min read

கர்நாடகா மாநிலம், ஹாசன் எம்.பி- பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்த பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில், பிரஜ்வல் தாய் பவானி ரேவண்ணாவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி அவற்றை வீடியோ பதிவு செய்து மிரட்டிய வழக்கில் கர்நாடகாவின் ஹசன் தொகுதி ஜேடிஎஸ் கட்சி எம்.பி-பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது கர்நாடகா போலீஸார் கடந்த மாதம் 27ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் வெளிவந்ததுமே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். அவரை கைது செய்ய போலீஸார் புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

பெங்களூருவில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா
பெங்களூருவில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா போலீஸில் சரணடைந்து வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா காட்டமுடன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு அடிபணிந்து மே 31ம் தேதி போலீஸில் சரணடைவதாக பிரஜ்வல் வீடியோ வெளியிட்டார். அதன்படி, பெங்களூரு வந்த அவரை இன்று அதிகாலை கைது செய்தனர்.

முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது போலீஸில் புகார் அளித்த மைசூரு, கே.ஆர்.நகரை சேர்ந்த பெண் கடத்தப்பட்டார். இந்த விவகாரத்தில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு, 10 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பவானி ரேவண்ணா, எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா
பவானி ரேவண்ணா, எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா

தற்போது பிரஜ்வல் நாடு திரும்பி, போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், பெண் கடத்தல் தொடர்பான வழக்கில் பிரஜ்வல் தாயார் பவானி ரேவண்ணாவுக்கு இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் (எஸ்ஐடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன்படி நாளை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!

வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in