போனில் பேசுவதை டேப் பண்ற அண்ணாமலை வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து முன்பே ஏன் பேசவில்லை... செல்லூர் ராஜூ கேள்வி!

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

ஒருவர் போனில் பேசியதை டேப் செய்தும், கட்சியினரின் ஊழல் பட்டியலை வெளியிடும் திறமை படைத்த அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து ஏன் முன்பே சொல்லவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் நீர்மோர் பந்தலை அமைக்கும்படி, கட்சியினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்காளர்கள் பலரின் பெயர் பட்டியலில் இருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. மதுரையில் தான் இப்படி இருக்கிறது என பார்த்தால் எல்லா மாவட்டங்களிலும் அப்படித்தான் உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கே காரணம்.

அதிமுக நீர் மோர் பந்தலை திறந்து வைத்த செல்லூர் ராஜூ
அதிமுக நீர் மோர் பந்தலை திறந்து வைத்த செல்லூர் ராஜூ

அரசியல் கட்சிகள் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. தொடர்ந்து அரசு அலுவலர்கள் பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்தார்கள். அப்போதெல்லாம் பூத் சிலிப்பை அரசு ஊழியர் கொடுத்தார்கள். இப்போது திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிகம் இருந்ததால் பூத் சிலிப் வழங்கும் பணியில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் ஆணையம் கட்சியினர் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதிபுத்திசாலி ஐபிஎஸ் படித்தவர் பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்தும் தற்போது பேசுகிறார். ஏன் முன்னரே பேசவில்லை. பாஜக வாக்காளர்கள் தூக்கப்பட்டு விட்டனர் என சொன்னால் அதை ஏன் முன்பே ஆணையத்திடம் அண்ணாமலை கூறவில்லை. தேர்தலில் தனக்கு சரியான வாக்குப்பதிவு இல்லை. தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று அண்ணாமலை பேசுகிறார். இதையெல்லாம் ஆணையத்திடம் மனுவாக ஏற்கெனவே கொடுத்து இருக்கணும்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்த அண்ணாமலை, கட்சியினர் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை வாக்காளர் பட்டியலில் இருந்து பாஜக வாக்காளர்கள் விட்டுப்போயுள்ளனர் என முன்பே சொல்லியிருக்க வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!


Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in