'நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது'; விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு வழக்கு விசாரணை
நீட் தேர்வு வழக்கு விசாரணை

நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டது. இதில் பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில் நீட் தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. 67 மாணவர்கள் 720-க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றது, ஹரியாணாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பிடித்தது போன்ற நிகழ்வுகள் நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்து பரவலாக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இதனால் உண்மையான தகுதியுடைய மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகி உள்ளதாக நாடு முழுவதும் பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சிவாங்கி மிஸ்ரா மற்றும் ஒன்பது பேர், கடந்த ஜூன் 1 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்நிலையில் ஜூன் 4ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தேசிய தேர்வு முகமை (என்டிஏ) எடுத்த முடிவை எதிர்த்து மேலும் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசனுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வினாத்தாள் வெளியானதன் காரணமாக இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் என்டிஏ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.

தேசிய தேர்வு முகமை (என்டிஏ)
தேசிய தேர்வு முகமை (என்டிஏ)

மேலும் விசாரணையின்போது நீதிபதி அசனுதீன் அமானுல்லா, “ (நீட் தேர்வின்) புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு பதில்கள் தேவை" என என்டிஏ சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பான பழைய மனுக்கள், புதிய மனுக்களை வரும் ஜூலை 8ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in