சரியான நேரத்தில் நானும் நாடாளுமன்றத்தில் நுழைவேன் - பிரியங்கா காந்தியின் கணவர் உறுதி

ராபர்ட் வதேரா - பிரியங்கா காந்தி
ராபர்ட் வதேரா - பிரியங்கா காந்தி
Updated on
2 min read

வயநாடு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி முடிவாகி இருப்பதை அடுத்து, அவரது கணவர் ராபர்ட் வதேரா மீண்டும் ஒருமுறை தனது எம்.பி ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி என இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒரு வேட்பாளாரால் இரு தொகுதிகளில் நின்று வென்றாலும், அவற்றில் ஒன்றை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். எனவே நீண்ட இழுபறிக்குப் பின்னர் ரேபரேலியை தக்கவைத்துக்கொள்வது எனவும், வயநாடு தொகுதியை காலி செய்வது எனவும் ராகுல் காந்தி முடிவு செய்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதே வேளையில் தனது முடிவு ரேபரேலி மற்றும் வயநாடு என இரு தொகுதி மக்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தனது முடிவு அமைந்திருக்கும் என முன்னதாக ராகுல் காந்தி அறிவித்திருந்தார். அதன்படி காலியாகும் வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் வேட்பாளராக, ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி களமிறங்குகிறார். அவருக்காக இப்போதே அதிகாரபூர்வமற்ற தேர்தல் பிரச்சாரங்கள் அங்கே தொடங்கி விட்டன.

இதனிடையே இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று இலவு காத்த கிளியான ராபர்ட் வதேரா, மீண்டும் தனது நம்பிக்கையை இழக்காது காட்சியளிக்கிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்றதும் அந்த தொகுதிக்கு தன்னை முன்னிறுத்திய ராபர்ட் வதேரா, பிரச்சார நோக்கிலும் காங்கிரஸ் தலைமையின் கவனத்தை கவரும் வகையிலும் பேட்டிகள் அளித்து வந்தார். ஆனால் ராபர்ட் வதேராவை பொருட்படுத்தாத காங்கிரஸ் தலைமை அங்கே தீவிர விசுவாசியான கே.எல்.சர்மாவை நிறுத்தி வெற்றி பெறச் செய்தது.

தற்போது காலியாகும் வயநாடு தொகுதியில் தனது மனைவி பிரியங்கா காந்தி போட்டியிடுவதை வரவேற்றிருக்கும் ராபர்ட் வதேரா, கையோடு தனது அரசியல் ஆசையையும் வெளிப்படுத்த தவறவில்லை. மனைவியின் வயநாடு வேட்பாளர் அறிவிப்பை வரவேற்று நேற்று நள்ளிரவு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராபர்ட் வதேரா, இன்றைய தினம் அதையே பேட்டியாகவும் அளித்துள்ளார். ”பிரியங்கா வயநாடு தொகுதியில் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் அங்கே வென்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். சரியான நேரத்தில் நான் பின்தொடர தயாராக உள்ளேன். அதாவது விரைவில் நானும் நாடாளுமன்றம் செல்லத் தயாராக உள்ளேன்” எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் ராபர்ட் வதேரா குறித்தோ அவரது அரசியல் ஆர்வம் குறித்தோ காங்கிரஸ் கருத்து ஏதும் தெரிவிக்காது மவுனம் காக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!

நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் வரலாற்றுச் சாதனை!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட வேண்டும்... ராகுலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தல்!

சோகம்... ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் 4 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in