மேற்கு வங்கத்தில் இரண்டு வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

மேற்கு வங்கத்தில் உள்ள பராசத், மதுராபூர் மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுதேர்தல் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு வங்க மாநிலம், பராசத் தொகுதியில் உள்ள தேகங்கா சட்டப் பேரவை தொகுக்கு உட்பட்ட கடம்பகாச்சி சாரதார் பாரா எஃப்பி பள்ளியில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் இன்று மறுதேர்தல் நடைபெறுகிறது.

மறு வாக்குப்பதிவு
மறு வாக்குப்பதிவு

இதேபோல், மதுராப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள காக்த்விப் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆதிர் மஹால் ஸ்ரீ சைதன்யா பித்யாபித் வாக்குச் சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மறு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு வாக்குச் சாவடிகளில் கடந்த 1ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது இங்கு ஏற்பட்ட வன்முறை காரணமாக இரண்டு வாக்குச் சாவடிகளிலும் மறு தேர்தல் இன்று நடைபெறுகிறது.

தேர்தல் பாதுகாப்புப் பணி
தேர்தல் பாதுகாப்புப் பணி

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இங்கு மறு வாக்குப்பதிவு நடத்த நேற்று முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in